நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது. பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத் தேர்வு மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, சேலம் உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் 15 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.
ஹால் டிக்கெட், அடையாள அட்டை, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டிலுக்கு மட்டுமே தேர்வறையில் கொண்டு செல்ல மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்த பின்னரே தேர்வெழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.