Published on 15/11/2019 | Edited on 15/11/2019
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகோயின் பதவிக் காலம் வரும் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே வரும் 18ஆம் தேதி பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற எண் ஒன்றில்தான் ரஞ்சன் கோகோய் அமரும் அறை உள்ளது.

கடைசியாக இன்று அவரது அறையில் நான்கு நிமிடங்கள் மட்டுமே அமர்ந்து அவரது பணிகளை முடித்தார். நாளை சனிக் கிழமை, மறுநாள் ஞாயிறு என்பதால் அவர் விடுமுறையில் இருப்பார். எனவே நீதிமன்றத்துக்கு அவர் வருவது இன்றே இறுதி நாளாக கருதப்படுகிறது. பார் கவுன்சில் சார்பில் இன்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.