Skip to main content

தீபாவளிக்குள் வெளிவரும் ஏர்டெல் பட்ஜெட் 4ஜி போன் - ஜியோவுக்கு நெருக்கடியா?

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
தீபாவளிக்குள் வெளிவரும் ஏர்டெல் பட்ஜெட் 4ஜி போன் - ஜியோவுக்கு நெருக்கடியா? 

வரும் தீபாவளிக்குள் ஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் 4ஜி இணைப்பு வசதி கொண்ட பட்ஜெட் போனை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், முகேஷ் அம்பானி ஜியோ 4ஜி பட்ஜெட் போனை ரூ.1,500 க்கு வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவின் பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.2,500 மதிப்புள்ள பட்ஜெட் 4ஜி திறன்பேசியை வெளியிட முடிவுசெய்துள்ளது. இந்தத் திறன்பேசிகள் அடுத்த ஆண்டுக்குள் 5 கோடி புதிய திறன்பேசி பயன்பாட்டாளர்களைக் குறிவைத்து உருவாக்கப்படவுள்ளன.

இந்த திறன்பேசி கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளிவரும் என்றும், இதன் செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ போனைப்போல் அல்லாமல், ஏர்டெல் போன் பெரிய திரையுடன் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன்களின் உற்பத்திக்காக லாவா மற்றும் கார்பன் செல்போன் தயாரிப்பு நிறுவனங்களிடம் ஏர்டெல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்த ஏர்டெல் திறன்பேசிகள் வரும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்திற்குள் கடைகளுக்கு விற்பனைக்கு வரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்