அமெரிக்கா மின்னணு கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’ எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுவருகிறது. இந்நிறுவனம் 2019-க்குள் டெஸ்லா தடம் பதிக்கும் என அறிவித்துள்ளது.
![tesla](http://image.nakkheeran.in/cdn/farfuture/kxMPY8hmqOz8YrnzMb0V0HU5Ywk3jn9CSOnXfGG-br8/1553001944/sites/default/files/inline-images/tesla-std.jpg)
பூமியின் மேற்பரப்பில் 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தினை டெஸ்லா நிறுவனத்தின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ருவு டிராகன் எனும் ராக்கெட் கடந்த 4-ம் தேதி சென்று வெற்றிகரமாக திரும்பிவந்தது.
இந்நிறுவனம் தற்போது சீனாவில் 5 பில்லியன் டாலர் முதலீட்டில் தனது எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை அந்நிறுவனம் அமைத்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியில் டெஸ்லா அமைக்கும் முதல் ஆலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை நிறுவும் முயற்சிகளைக் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்லா எடுத்து வருகிறது. ஆனால், இந்திய அரசு அதற்கு சரியாக ஒத்துழைக்காமல் இருந்துவருகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. இதனை கடுமையாக விமர்சித்தும் இருக்கிறார். இந்தியாவில் மொத்தமே 6000 எலெக்ட்ரிக் கார்கள் தான் விற்பனை ஆகியிருக்கின்றன. எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளில் இந்திய அரசும் இறங்கியுள்ளது. ஆனால் அதற்கான அடிப்படை கட்டமைப்பு சரியாக இல்லாமல் இருக்கிறது. இருந்தபோதும் இந்தியாவில் 2019-க்குள் டெஸ்லா தடம் பதிக்கும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரபலமான இந்நிறுவனம் இதுவரை தனது கார் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு செலவே செய்ததில்லை.