Published on 11/04/2019 | Edited on 11/04/2019
நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமான இன்று 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவின் ஆனந்த்பூர் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர் கட்சியினரிடையே நடந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவர் உயிரிழந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர்.