Skip to main content

ஃபரூக் அப்துல்லா விவகாரம் - வைகோ மனு தள்ளுபடி!

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத்தரக்கோரி மதிமுக பொதுசெயலாளரும் எம்.பியுமான வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். அந்த வகையில் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது அது முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எனவே அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
 

j



இந்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு செப்டம்பர் மாதம் மறுத்திருந்தது. இந்நிலையில் இந்த மனு மீதான இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அவர் வீட்டு காவலில் இருப்பதாக அம்மாநில அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்