இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போது குறையத் தொடங்கியுள்ளது. தினசரி கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. இந்தநிலையில் டாடா ஸ்டீல் நிறுவனம், கரோனாவால் பாதிக்கப்படும் தனது ஊழியர்களுக்கு உதவும் வகையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தனது நிறுவன ஊழியர் யாரேனும் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தால், அந்த ஊழியரின் 60 வயதுவரையிலான சம்பளம் அவரது குடும்பத்திற்கு மாதாமாதம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு தங்கும் வசதிகளும், மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், தனது நிறுவனத்தைச் சேர்ந்த முன்களப்பணியாளர் யாரேனும் பணியின்போது கரோனா பாதிக்கப்பட்டு இறந்தால், பட்டம் பெறும்வரை அவரது குழந்தையின் கல்விச்செலவை டாடா ஸ்டீல் நிறுவனமே ஏற்கும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு குவிந்துவருவது குறிப்பிடத்தக்கது.