Published on 14/12/2018 | Edited on 14/12/2018
டாடா மோட்டார்ஸ் கார்களின் விலை ஜனவரி 1, 2019 முதல் ரூ 40,000 வரை உயரும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூபாய் மதிப்பின் சரிவு மற்றும் வாகன உற்பத்தியின் உள்ளீடு செலவுகள் அதிகரித்துள்ளதால் அதனை ஈடு செய்யும் விதமாக இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 8-ம் தேதி ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதே காரணத்திற்காக தனது நிறுவனத்தின் கார்களின் விலை மூன்று சதவீதம் உயரும் என அறிவித்திருந்தது. மேலும் மாருதி, டொயோட்டா நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.