Skip to main content

3 நாட்களுக்கு மதுபானக்கடைகள் மூடல்!!!

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் காமராஜர் நகர் தொகுதிகுட்பட்ட 10 ஆம் எண் வாக்குச்சாவடியில் மட்டும் வரும் 12 ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
 

tasmac


அதேசமயம் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 10 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 13 ஆம் தேதி காலை 6 மணி வரை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மூன்று நாட்கள் புதுச்சேரி முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூடவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோடை வெப்பத்தை தணிக்க புதுவையில் (மது) தாகசாந்தி அடைவோர் இதனால் தவிப்பில் உள்ளனர். கடலூர், விழுப்புரம் எல்லைப்பகுதியை சேர்ந்தோர் தாகசாந்தியடைய புதுவைக்கு படையெடுப்பது போய் அம்மூன்று நாள்களும் கடலூர், விழுப்புரம் எல்லைப்பகுதிக்கு புதுவைவாசிகள் படையெடுக்க வேண்டியிருக்கும்.
 

 

சார்ந்த செய்திகள்