Published on 03/07/2021 | Edited on 03/07/2021
புதுச்சேரி, கருவடிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சித்தானந்தா குருக்கள் கோவிலில் பாலூட்டும் தாய்மார்களுக்கு என சிறப்பு மையம் துவக்கப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு மையத்தைத் திறந்துவைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "புதுச்சேரியில் கரோனா நோய் தொற்றானது குறைந்துவருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே அனைத்து ஆன்மீக தலங்களும் திறக்கப்பட்டன. தற்போது இரவு 9 மணிவரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரி திறக்க வாய்ப்புள்ளது. நோய் தொற்றினைக் கருத்தில்கொண்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது" என்றார்.