Published on 18/07/2022 | Edited on 18/07/2022
மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பு இல.கணேசனுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழர்கள் ஆளுநராக பதவி வகிக்கும் மாநிலங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் தெலங்கானா ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். கடந்த ஆண்டு முதல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசனுக்கு மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தெலங்கானா, மேற்கு வங்கம், மணிப்பூர், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தமிழர்கள் ஆளுநராகப் பதவி வகிக்கும் பெருமை கிடைத்துள்ளது.