Skip to main content

குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட 2,000 பீர் பாட்டில்கள்!

Published on 02/08/2017 | Edited on 02/08/2017
குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட 2,000 பீர் பாட்டில்கள்!

மத்தியப்பிரதேசம் மாநிலம் தேவாஸ் பகுதியில் உள்ள குளத்தில் 2,083 பீர் பாட்டில்கள் மீட்கப்பட்டுள்ளன.



அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் குளத்திற்கு குளிக்கச் சென்றபோது, உள்ளே பீர் பாட்டில்கள் கிடப்பதைப் பார்த்துள்ளார். பின்னர் அளவுக்கு அதிகமான பீர் பாட்டில்கள் குளத்தினுள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதற்குள் தகவலறிந்த பொதுமக்கள் குளத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். பின்னர் நீச்சல் வீரர்களுடன் வந்த காவல்துறையினர், குளத்தினுள் கிடந்த பாட்டில்களை வெளியே கொண்டுவந்து பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம் 2,083 பீர் பாட்டில்கள் சீல் செய்த நிலையில் கிடைத்துள்ளன.

இந்த பாட்டில்களை யார் இந்த குளத்தில் கொண்டுவந்து போட்டு சென்றிருப்பார்கள் என சரியாக தெரியாத நிலையில், மதுபானக்கடைகளில் திருடப்பட்ட பாட்டில்களைப் பாதுகாப்பதற்காக குளத்திற்குள் வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

திருடப்பட்ட பாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்