Skip to main content

இளம் பெண்ணை சரமாரியாக தாக்கிய ஸ்விகி ஊழியர்... வீடியோ வெளியாகி பரபரப்பு!

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

viral incident

 

நடுரோட்டில் இளம்பெண் ஒருவரை ஸ்விகி ஊழியர் ஒருவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒடிஷாவில் வாகன நெரிசல் நிறைந்த சாலையில் இளம்பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். வெகுநேரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த பெண் அந்த இளைஞரை தாக்கியதோடு கூச்சலிட ஆரம்பித்தார். இதனை கண்ட ஸ்விகி ஊழியர் ஒருவர் அந்த பெண்ணையும் ஆணையும் விலக்கிவிடச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த இளம்பெண் ஸ்விகி ஊழியரிடம் சண்டையிட முயன்றதோடு தாக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஸ்விகி ஊழியர் அந்த இளம்பெண்ணை சரமாரியாக தாக்கினர். இதனை கண்ட வாகனஓட்டிகள் இளம்பெண் ஒருவர் தாக்கப்படுவதைக் கண்டு அந்த ஸ்விகி இளைஞரை கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும் அவர் தொடர்ந்து அந்த பெண் மீது தாக்குதலில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில்  வீடியோவாக வெளியான நிலையில் ஸ்விகி ஊழியர் பெண்ணை தாக்கும் அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்