மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தால் தமிழகத்திற்கு பெய்ய வேண்டிய மழையின் அளவு தடுக்கப்படுகிறது எனவே மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை வெட்டி குறைக்க வேண்டும் எனக்கோரி ஜெய்சுதின் என்ற வழக்கறிஞர் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் தென்மேற்கு பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்படுவதால் மற்ற மாநிலங்களை போல் தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு பலனளிப்பதில்லை.
மேலும் தென்மேற்கு பருவக்காற்று மேற்குத்தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்படுவதால் கேரளாவிற்கு அதிக பலன் கொடுப்பதோடு 3,000 டி.எம்.சி மழைநீர் வீணாக கடலில் கலப்பதாகவும் அந்த மனுவில் கூறியுள்ள ஜெய்சுதின்
சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்கும் பட்சத்தில் தென்மேற்கு பருவமழையானது தமிழகத்திற்கு கைகொடுக்கும் எனவும் இதனால் நீருக்காக மற்ற மாநிலங்களை நாடவேண்டிய அவசியம் தமிழகத்திற்கு இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.