ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவையில் இருந்த மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள், சட்டப்பேரவையின் முன்னான் சபாநாயகர் மகனுக்கு சொந்தமான கடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேச முன்னாள் சபாநாயகரான கோடேலா சிவ பிரசாத் ராவின் மகன் சிவராம கிருஷ்ணா குண்டூரில் ஃபர்னிச்சர் ஷோ ரூம் ஒன்று வைத்துள்ளார். இந்த ஷோ ரூமில், ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைக்கு சொந்தமான மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள் இருப்பதை சட்டப்பேரவை அலுலவர்கள் கடந்த மூன்று தினங்களுக்கு முன் கண்டுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறைக்கு அவர்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் சுமார் 70 மரச்சாமான்களை மீட்டனர். கடந்த 2016-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருந்து அமராவதிக்கு சட்டப்பேரவையை மாற்றிய போது தற்காலிக சட்டப்பேரவை கட்டடத்தில் பொருட்கள் சேதமாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் தங்களது வீடுகளுக்கு பொருட்கள் எடுத்துச் சென்றதாக முன்னாள் சபாநாயகர் கோடேலா சிவ பிரசாத் ராவ் தெரிவித்துள்ளார். அந்த மரசமான்களை எடுத்து செல்லுமாறு ஏற்கனவே சட்டப்ரேவை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் இதுவரை அந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.