புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், ஏழைகளுக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்ய விரிவான திட்டங்களை உருவாக்க மத்திய மற்றும் மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. அதில், கருத்துகளை வெளியிட்ட நீதிபதிகள், இந்தியாவை உருவாக்குவதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய பங்கு மிக மிக முக்கியமானது என்று தெரிவித்தனர். அதேசமயம், பல கிராமங்களில் தற்பொழுதும் வயிற்றில் துணையைக் கட்டிக் கொண்டு, வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு மக்கள் உறங்க செல்கின்றனர் என்றும் வேதனைப்பட்டனர்.
இந்தியாவின் வளர்ச்சியில், விவசாயிகளும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் முக்கியமானவர்கள் என்றும், அவர்களை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது என்றும் தெரிவித்தனர்.