வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே, மத்திய அரசிடம் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கமுடியுமா எனக் கேள்வி எழுப்பியிருந்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு நிறுத்தி வைக்காவிட்டால், நாங்கள் நிறுத்திவைப்போம் எனக் கூறியிருந்தது. வேளாண் சட்டம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க குழு அமைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும் விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் குழு ஒன்றையும் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில், 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஜித்தேந்தர் சிங் மன், சர்வதேச கொள்கைகள் குழுத் தலைவர் பிரமோத் குமார் ஜோஷி, விவசாயப் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, அனில் தன்வத் என்ற மகாராஷ்டிர விவசாயக் குழுத் தலைவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.