Skip to main content

சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளுக்கு மீண்டும் அனுமதி...

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
saridon


இந்தியாவில் மருந்து மாத்திரைகள் எவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும், தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மருந்து மாத்திரைகளை மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக்கழகம் ஆய்வு செய்தது. அதில் குறிப்பிட்ட இருமல் மற்றும் வலி தீர்க்கும் மாத்திரைகள் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது என்று அறிக்கை வெளியாகியுள்ளது.
 
 
சாரிடன், பன்ட்ரம் கீரிம் உள்ளிட்ட 327 மருந்து மாத்திரைகளை தடை செய்தது. இந்நிலையில், மத்திய அரசின் தடைக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதற்கட்டமாக சாரிடான், டார்ட், பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்