கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வைரஸை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் உலகநாடுகள் திணறி வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
![corona virus impact in india](http://image.nakkheeran.in/cdn/farfuture/AKqPlvDV4zUmJ2IZS5ChVsqQKOsgNBQWgUphCEYSLQs/1587872564/sites/default/files/inline-images/111111_306.jpg)
தற்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு 26 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 1500- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,942 லிருந்து 26,496 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 779லிருந்து 824ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து 5,804 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.