”வங்கி கணக்குகளுக்கும், மொபைல் இணைப்பு சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் இல்லை. தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம். தனிநபர் கண்ணியம் காக்க ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும். குறைந்த, அத்தியாவசிய தகவல்களே ஆதாருக்காகப் பெறப்படுகிறது.ஆதார் எண்னை போலியாக உருவாக்க முடியாது.நீட்,சிபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கூடாது. பான் கார்டுக்கு ஆதார் கார்ட் அவசியம். பள்ளிச் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயம கிடையாது. ஆதாருக்காகப் பெறப்படும் தகவல்கள் குறைவு, நன்மைகள் அதிகம்” என்று நீதிபதி ஏ.கே சிக்ரி தெரிவித்தார்.
அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் மறுக்கப்பட கூடது, அதேபோல, யாருக்கும் அரசின் சலுகைகளும் மறுக்கப்படக் கூடாது என்று தீபக் மிஸ்ரா தலைமையில் அடங்கிய ஐந்து பேர் கொண்ட நீதிபதிகளின் அமர்வு தெரிவித்துள்ளது.