கேரளா மக்களவை தோ்தலுக்கான காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் எம்.எல்.ஏ பென்னி பெகனன் (60) தற்போது சாலக்குடி பாராளுமன்ற தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டியிருந்தாா். மேலும் வயநாட்டில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ராகுல் காந்தியுடன் பென்னி பெகனன் உடனிருந்தாா்.
இந்த நிலையில் இன்று பென்னி பெகனன் பிரச்சாரத்தில் ஈடுபட்டியிருக்கும் போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் போட்டு் கீழே விழுந்தாா். உடனே அவருடன் இருந்த கட்சியினா் பென்னி பெகனை திருச்சூாில் உள்ள தனியாா் மருத்துவ மனையில் கொண்டு அனுமதித்தனா். அவருக்கு உடனடியாக மருத்துவா்கள் ஆப்ரேசன் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினாா்கள்.
அதன்பிறகு இரண்டு வாரம் முமுமையாக பென்னி பெகனன் ஓய்வு எடுக்க வேண்டுமென்று மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். வருகிற 23-ம் தேதி வாக்கு பதிவு நடக்கயிருப்பதால் பென்னி பெகனன் பிரச்சாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இது காங்கிரசாா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலக்குடியில் பென்னி பெகனை எதிா்த்து சிபிஎம் சிட்டிங் எம்.பியும் பிரபல நடிகருமான இன்னோசென்ட் மற்றும் பா.ஜ.க சாா்பில் மாநில பொதுச்செயலாளா் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றனா்.