Published on 15/09/2022 | Edited on 15/09/2022

உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை பயின்று வந்த மாணவர்கள் தொடர் முயற்சிகள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இந்தியாவில் படிப்பை தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அனுமதிகோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள், கல்வியாளர்கள் தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.