Skip to main content

டார்ஜிலிங்கில் 104 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
டார்ஜிலிங்கில் 104 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்

மேற்கு வங்க மாநிலத்தில் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைமையில் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் பிமல் குருங் அழைப்பை ஏற்று டார்ஜிலிங் மலைப்பகுதியில் கடந்த 104 நாட்களாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின்போது கடைகள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறையும் வெடித்தது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பிமல் குருங்கை போலீசார் தேடி வருவதால் அவர் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில், தனி மாநில கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் 15 நாட்களில் அதிகாரிகள் அளவிலான கூட்டத்தை கூட்டும்படி உள்துறைக்கு செயலாளருக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். அத்துடன், முழு அடைப்பு போராட்டத்தை திரும்ப பெறும்படி பிமல் குருங்கிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதனை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும், இன்று காலை 6 மணி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் பிமல் குருங் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்