நாடாளுமன்றத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த மாநில நிதியமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று (30/12/2021) டெல்லியில் நடைபெற உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய அம்சங்கள் குறித்து மாநிலங்களின் கருத்துக் கேட்கப்பட உள்ளது. மாநில நிதியமைச்சர்கள் தங்களது மாநிலத்திற்கு வேண்டிய மருத்துவ கட்டமைப்பு, ரயில் வழித்தடம், விமான நிலையம், மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதியை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்க உள்ளனர். இதனை பதிவுச் செய்துக் கொள்ளும் மத்திய நிதியமைச்சர், மாநில நிதியமைச்சர்களின் கோரிக்கைகளை பட்ஜெட்டில் சேர்த்து, மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஜிஎஸ்டி கவுன்சிலின் 46- வது கூட்டம் நாளை (31/12/2021) நடைபெறுகிறது. ஜிஎஸ்டி வரி விகிதங்களை முறைப்படுத்துவதற்கான அமைச்சர் குழுவின் அறிக்கை, இந்த கூட்டத்தில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.