Skip to main content

காங்கிரஸிடமிருந்து மாநிலங்களவை நிலைக்குழு பறிப்பு – வெங்கய்யா நடவடிக்கை!

Published on 22/09/2017 | Edited on 22/09/2017
காங்கிரஸிடமிருந்து மாநிலங்களவை நிலைக்குழு பறிப்பு – வெங்கய்யா நடவடிக்கை!



மாநிலங்களவையில் காங்கிரசும் பாஜகவும் தலா 57 இடங்கள் என்ற நிலையை எட்டியதால் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பு வகித்த ஒரு நிலைக்குழுவை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பறித்திருக்கிறார்.

மாநிலங்களவையில் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப நிலைக்குழக்களின் தலைவர் பதவிகள் ஒதுக்கப்படுவதுண்டு. அந்த அடிப்படையில் காங்கிரஸ் மூன்று நிலைக்குழுக்களின் தலைவர் பதவிகளை வகித்தது.

இப்போது, மாநிலங்களவையில் காங்கிரசும் பாஜகவும் தலா 57 இடங்கள் என்ற நிலையை எட்டியுள்ளன. இதையே காரணமாக கொண்டு காங்கிரசிடமிருந்து சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நிலைக்குழுத் தலைவர் பதவியை பாஜகவுக்கு கொடுத்திருக்கிறார்.

இப்போதைய நிலையில் பாஜகவும் காங்கிரஸும் தலா இரண்டு நிலைக்குழு தலைமைப் பதவிகளையும், திரிணாமுல், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் தலா ஒரு நிலைக்குழு தலைவர் பதவியையும் பெற்றுள்ளன.

உள்துறைக்கான நிலைக்குழுத் தலைவராக ப.சிதம்பரம் இருக்கிறார். ஆனந்த் சர்மா வகித்த தலைவர் பதவியைத்தான் பாஜக பறித்துள்ளது.

சார்ந்த செய்திகள்