இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் டோனி, தனது 38-வது பிறந்தநாளை நாளை (ஜூலை 07) கொண்டாடுகிறார். இதனையடுத்து டோனியைக் கவுரவப்படுத்தும் விதமாக ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார் டோனி. அதே போல் உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணியினரிடமும், சக வீரர்களிடமும் பழகும் விதம் காரணமாக பலரும் அவரை "கூல் கேப்டன்" என்றே பாராட்டி வருகின்றனர். 2004- ஆம் ஆண்டு இந்திய அணியில் இணைந்த மகேந்திர சிங் டோனி 2007- ஆம் ஆண்டு துவங்கி 2016- ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார்.
? A name that changed the face of Indian cricket
— ICC (@ICC) July 6, 2019
? A name inspiring millions across the globe
? A name with an undeniable legacy
MS Dhoni – not just a name! #CWC19 | #TeamIndia pic.twitter.com/cDbBk5ZHkN
தோனி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி பல கோப்பைகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை பிறந்த நாள் கொண்டாட உள்ள டோனியைக் கவுரவப்படுத்தும் விதமாக ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றிய டோனி என்கிற தலைப்பில் உள்ள ஐசிசி வீடியோவை வெளியிட்டுள்ளது. வீடியோவில் டோனியின் பல்வேறு சாதனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வீடியோவில் விராட் கோலி, பும்ரா, ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற பிரபல வீரர்கள் டோனியின் பங்களிப்பு குறித்து பாராட்டிப் பேசி உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.