
போலி மதுபானம் குடித்த 12 பேர் மத்திய பிரதேச மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் மான்பூர் பிருத்வி, பஹாவலி ஆகிய கிராமங்களை சேர்ந்த சிலர், போலி மதுபானத்தை அருந்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீஸார், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலி மதுபானம் வேறு எங்கெங்கு விற்கப்படுகிறது என விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்த போலி மதுபான சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதோடு, அந்த கிராமங்கள் அடங்கிய மாவட்டமான மோரேனாவின் கலால் அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.