அண்மைக்காலமாகவே தெருநாய்களால் சிறுவர்கள், பொதுமக்கள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில் கேரள மாநிலம் கோழிக்கோடு அறைகிணறு பகுதியில் சிறுவனைத் தெருநாய்கள் கடித்து குதறும் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் கேரளாவில் நீதிபதி ஒருவரையே தெருநாய்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது தெரு நாய் தாக்குதல் விவகாரம்.
இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அபூபக்கர் என்பவர் தெருநாய் கடியில் இருந்து தப்பிப்பதற்காக பிரத்தியேகமாக இரும்பு கிரிலால் ஆன வண்டி ஒன்றை தயார் செய்து தினமும் நடந்து சென்று மாவட்ட ஆட்சியரிடம் தொருநாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.