Published on 06/11/2021 | Edited on 06/11/2021

வரும் நவம்பர் 14ஆம் தேதி அன்று தென்மண்டலக் குழு கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மாநிலங்களுக்கிடையே சுமுக உறவை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள ஆலோசனை நடக்கவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறவிருக்கும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அல்லது தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.