பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.
கரோனா பெருந்தொற்று பரவல், பொருளாதாரம், பெட்ரோல்-டீசல் விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி மத்திய அரசுக்கு எதிராகப் போராட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஜூன் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள கட்சித் தலைமைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கிறார் சோனியாகாந்தி. எந்த மாதிரி போராட்டம் என்பது பற்றியும், அந்த போராட்டத்தை டெல்லியில் மட்டும் நடத்துவதா? அல்லது இந்தியா முழுவதும் நடத்துவதா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்படலாம் என்கிறார்கள் கதர்சட்டையினர்.