அசாமில் காந்தி சிலையை அகற்றுவதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்
அசாம் மாநிலம் குவாஹத்தி மாவட்டத்தில் உள்ள சரினியா மலையில் காந்தி மண்டப தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ராம்கிந்தார் வடிவமைத்த மகாத்மா காந்தியின் சிலையை அங்கிருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. துணை கமிஷனர் தலைமையில் கடந்த திங்கட்கிழமை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
சிலை காந்தியின் உருவத்தை போன்று இல்லை என்பதால் அகற்றப் போவதாக கூறி குவாஹத்தி மாவட்ட நிர்வாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், மகாத்மா காந்தியின் சிலையை அகற்றும் குவாஹத்தி நிர்வாகத்தின் முடிவுக்கு அம்மாநில சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.