Skip to main content

மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்; பாஜக -வை சீண்டும் கூட்டணி கட்சி...

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் குறித்து மக்கள் உங்களிடம் கேள்வி கேட்பார்கள், அதற்கு பதில் சொல்ல தயாராக இருங்கள் என்று பாஜகவை அதன் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சி கிண்டல் செய்துள்ளது.

 

bjp

 

இதுகுறித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில், "2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து ஆட்சியில் அமர்ந்தது பாஜக. இப்போது 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை அந்த கட்சி எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில் 2014-ம் ஆண்டு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்கள் கேட்பார்கள், அதை எதிர்கொண்டு பதில் அளிக்க பாஜக தயாராக இருக்க வேண்டும்.

காஷ்மீர் பகுதியில் அமைதி ஏற்படுவது முதல், ராமர் கோயில் கட்டுவது வரை மக்கள் பல கேள்விகள் கேட்பார்கள். மக்களை நீண்ட நாட்களுக்கு ஏமாற்ற முடியாது என்பதே வரலாறு நமக்கு கூறுவது. பிரச்சாரத்தின் போது மக்கள் கேள்வியும் கேட்பார்கள், அதேசமயம், வாக்குசீட்டு மூலம், மின்னணு வாக்கு எந்திரங்கள் மூலம் பதிலும் அளிப்பார்கள். மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது மக்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்து வருகிறது. உலகில் பல நாடுகள் மின்னணு வாக்கு எந்திரங்களை பணத்தின் சக்தியால் கட்டுப்படுத்த முடியும் என்பதால் அதை பயன்பாட்டில் இருந்து நிறுத்திவிட்டன. ஆனால், நமது அரசு மட்டும் ஏன் மின்னணு எந்திரங்களை தொடர்ந்து வலியுறுத்துகிறது? என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்று அந்த செய்தித்தாளில் வந்த தலையங்கமும் பாஜக -வை தாக்குவது போல இருந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படு ஒரு கட்டுரை வந்திருப்பது பாஜக-சிவசேனா கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளது என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்