Skip to main content

மம்தா வரைந்த ஓவியத்தைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத்!

Published on 29/11/2017 | Edited on 29/11/2017
மம்தா வரைந்த ஓவியத்தைப் பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரைந்த ஓவியத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார்.



இந்திய குடியரசுத்தலைவராக பொறுப்பேற்ற பின் முதன்முதலாக மேற்கு வங்கம் சென்றார் ராம்நாத் சிங். அவரை மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று வரவேற்றார். மேலும், குடியரசுத்தலைவரின் வருகை பெருமையளிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் மற்றும் அம்மாநில முதல்வர் கலந்துகொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி தான் வரைந்த ஓவியத்தை ராம்நாத் கோவிந்திற்கு பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட ராம்நாத் சிங் இந்த ஓவியம் குடியரசுத்தலைவர் மாளிகையில் இடம்பெறும் என தெரிவித்தார்.

பாஜக மீது கடும் விமர்சனங்களை பதிவு செய்துவரும் மம்தா பானர்ஜியோடு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த இணக்கமாக பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

சார்ந்த செய்திகள்