Published on 23/12/2019 | Edited on 24/12/2019
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தேசிய குடிமக்கள் பதிவேட்டை பற்றி பேசும்போது, இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசிக்கவில்லை என்றும், தற்போது அஸ்ஸாமில் மட்டுமே இது செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இவரின் பேச்சு அப்போதே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மோடியின் பேச்சை விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசும்போது, " மோடியின் பேச்சு எனக்கு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு கொண்டு வரும் என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். ஆனால் அந்த கருத்துக்கு நேர் எதிராக தற்போது பிரதமர் பேசியுள்ளார். யாருடைய பேச்சு உண்மையானது" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.