தொடர் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பது கடினம்: பதவி விலகிய இன்போசிஸ் செயல்தலைவர் கருத்து
பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான இன்போசிஸிசின் செயல் தலைவர் விஷால் சிக்கா, இன்று தனது பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இது அந்த நிறுவனத்தின் வருவாயில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது செயல்தலைவர் பதவியில் இருந்து விலகிய விஷால் சிக்கா, செய்தியாளர் சந்திப்பில் தனது பதவிவிலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இது ஒரு மோசமான நாள். ஆனாலும், இதுவரை என் தலைமையிலான குழு சாதித்தவை பெருமை கொள்ளக்கூடிய அளவிற்கு சிறந்தவை என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ‘தொடர் குற்றச்சாட்டுக்களையும், எரிச்சலை ஏற்படுத்தும் ஒரே விஷயம் சார்ந்த இரைச்சல்களையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’ என தெரிவித்துள்ளார். இவரது பதவிவிலகல் கடிதம் நிர்வாக தரப்பில் சில நிமிடங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.