Skip to main content

7 மாதங்களுக்குப் பிறகு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

ரரக

 

உலகம் முழுவதும் கரோனா உச்சக்கட்டத்தில் இருந்து வருகின்றது. உலக நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகின்றன. பல நாடுகளில் தடுப்பூசி சோதனைகள் பரிசோதனையில் இருந்தாலும் இதுவரை பரிபூரண வெற்றி கிடைக்கவில்லை. சில நாடுகளில் தற்போதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. 


இந்த கரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் சில மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசு பள்ளிகளைத் திறக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ள நிலையில், ஆந்திரா, அசாம், ஹரியானா, மேகாலாயா, காஷ்மீர், நாகாலாந்து, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 7 மாதங்களுக்குப் பிறகு உத்தரப்பிரதேசம், பஞ்சாப், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் எதிர்பார்ப்பு அதிக அளவில் எழுந்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்