பீகார் எஸ்.பி.ஐ. கிளையில் ரூ. 5 லட்சம் கொள்ளை
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ள கடோரியா பசார் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் நேற்று மதியம் ஊழியர்கள் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்தது.அங்குள்ள ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். பின்னர் பணம் இருக்கும் அறைக்குள் நுழைந்து 5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து வங்கி மேலாளர் ரிஷிகேஸ் குமார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த வங்கி கிளை போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. பட்டப்பகலில் போலீஸ் நிலையம் அருகில் உள்ள வங்கியில் கொள்ளை அடித்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.