Skip to main content

மணல் தட்டுபாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி: நாராயணசாமி பேட்டி

Published on 03/12/2017 | Edited on 03/12/2017
மணல் தட்டுபாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரியில் மணல் தட்டுபாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது :-

இளம் வழக்கறிஞர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இந்த மாதம் முதல் வழங்கப்படயுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 9 லட்சம் செலவாகும். அடுத்த ஆண்டு முதல் இது அரசு திட்டமாக செயல்படுத்தப்படும். 

புதுச்சேரியில் கடந்த காலங்களில் மாற்று திறனாளிகள் தொழில் தொடங்க வாங்கிய கடன் ரூபாய் 8.5 கோடியை தள்ளுபடி செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். 

புதுச்சேரியில் மணல் தட்டுபாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.

- சுந்தரபாண்டியன் 

சார்ந்த செய்திகள்