Published on 02/03/2019 | Edited on 02/03/2019

ஆந்திராவின் கடப்பாவில் 1219 துப்பாக்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த 1987ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட 1219 துப்பாக்கிகளை போலீசார் அழித்துள்ளனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த துப்பாக்கிகளில், சிறிய ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ரைபிள் ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்கும். அப்படி கைப்பற்றப்பட்ட இந்த துப்பாக்கிகளை ரோலர் கொண்டு போலீசார் அழித்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் சோதனையின் போது போலீசாரிடம் ஒப்படைக்காமல் உள்ள துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.