தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவடைந்து கடந்த வாரம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக அசோக் கெலொட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் துணை முதல்வரான சச்சின் பைலட் ராஜஸ்தானின் பாரம்பரிய தலைப்பாகையுடன் பங்கேற்றார். 2013 வரை பெரும்பாலும் தலைப்பாகை அணிந்தபடியே வலம் வந்தவர், 2013 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பின்னர் தனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய தலைப்பாகையை காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வரை அணிய மாட்டேன் என அறிவித்தார். அதன் பின் பல்வேறு சூழ்நிலைகளில், பலர் அவருக்கு தலைப்பாகைகளை பரிசாக வழங்கிய போதும் அதனை அவர் அணியவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமான்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதையடுத்து பதவியேற்பு விழாவில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தலைப்பாகை அணிந்தபடி அவர் பங்கேற்றார்.