அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை செல்லலாம் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே எதிர்த்து இந்து அமைப்புகளும், பெண்கள் எதிர்பாளர்களும் டிசம்பர் 26 அன்று கேரளா, டெல்லி, சென்னை குமரியில் பெண்கள் ஜோதி போராட்டத்தை நடத்தினர்.
அதனைக் கண்டிக்கும் வகையில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தீர்ப்பை ஆதரித்தும் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை செல்லலாம் என்பதை வலியுறுத்தி ஜனவரி 01 அன்று கேரளாவின் பினராய் விஜயனின் அரசு பெண்கள் மனித சுவர் போராட்டத்தை நடத்தியது. கேரளாவின் வட எல்லையான காசர்கோடு தொடங்கி தென் எல்லையான திருவனந்தபுரம் வரை சுமார் 620 கி.மீ. தொலைவு பெண்கள் மனித சுவர் போராட்டம் நடந்தது மாலை 4.25 - 5.00 மணி வரை பத்து மாவட்டங்கள் வழியாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் சுமார் 55 லட்சம் பெண்கள் கலந்து கொண்டார்கள் அந்தந்த மாவட்டங்களின் மாவட்டக் கலெக்டர்கள் அரசுப் பணியாளர்கள். கேரளாவின் மொத்தமுள்ள 195 அமைப்புகளும் இதில் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் உலக ரெக்கார்டான, யுனிவர்சல் ரெக்கார்டு ஃபாரம், அமெரிக்கன் புக் ஆஃப் ரெக்கார்டு, அஃபிஷியல் புக் ஆஃப் ரெக்கார்டு என்ற மூன்று ஆவண அமைப்புகளின் பிரதிநிதிகளால் கண்காணிக்கப்பட்டு மெகா மனித சுவர் போராட்டம் என்று அவைகளில் பதிவாகி சான்றிதழும் தரப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
சபரிமலையில் பெண்கள் ஒதுக்கப்படுவதை எதிர்த்து நடக்கும் போராட்டம் என்பதால் நாங்கள் கலந்து கொண்டோம் என்கிறார்கள். இதில் கலந்து கொண்ட பெண்கள்.