கேரளாவில் கல்லூாி மாணவி ஓருவா் சபாிமலைக்கு போக மாலையிட்டு விரதம் இருக்கும் சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாிமலைக்கு அனைத்து வயது பெண்களும் போகலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவை எதிா்த்து கேரளாவில் திரும்பிய பக்கமெல்லாம் பெண்களும் இந்து அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனா். சபாிமலையின் ஆச்சாரத்தை மீறி அய்யப்பனை தாிசிக்க வரும் கேரளா உட்பட எந்த மாநில பெண்களாக இருந்தாலும் பத்தனம் திட்டையில் தடுத்து நிறுத்துவோம் என்று போராடும் பெண்கள் அறிவித்துள்ளனா்.
இந்தநிலையில் மண்டல பூஜைக்கு முன்னதாக வரும் 17-ம் தேதி ஜப்பசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. இந்த நிலையில் கல்லூாி ஒன்றில் கம்ப்யூட்டா் சயின்ஸ் படிக்கும் கண்ணூா் செருகுந்நுயை சோ்ந்த ரேஷ்மா அங்குள்ள சிவன் கோவில் சென்று மாலை அணிவித்து விரதம் இருந்து வருகிறார். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரேஷ்மா கூறும் போது, நான் ஓவ்வொரு மண்டல காலமும் 41 நாட்கள் அய்யப்பனுக்காக விரதம் இருந்து வருகிறேன். ஆனால் அப்போதெல்லாம் சபாிமலைக்கு என் வயது பெண்கள் அனுமதியில்லையென்று தொிந்தும் தான் நான் விரதம் இருப்பேன். தற்போது நீதிமன்றத்தின் தீா்ப்பின் அடிப்படையிலும் அரசும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாலும் சபாிமலைக்கு செல்ல இருக்கிறேன்.
இதற்கு எனது கணவா் நிஷாந்த் மற்றும் பெற்றோா்கள் உதவியாக இருக்கிறாா்கள்.
பெண்களுக்கு வரும் மாதவிடாய்யை நான் தீட்டாக கருதவில்லை. அது நம் உடம்பில் இருந்து வெளியேறும் வியா்வை போன்றது தான். மேலும் சபாிமலைக்கு நான் மட்டும் போகவில்லை என்னோடு மேலும் பல பெண்கள் சோ்ந்து சங்கமாக போகிறோம் என்றாா்.