Skip to main content

ட்ராபிக் போலீஸ் கொடுத்த ரோஜா: குடும்பத்தில் வந்த குழப்பம்

Published on 28/07/2018 | Edited on 28/07/2018

“நான் கேட்டேனா…. ஹெல்மெட் வேணும்னு நான் கேட்டேனா… ஹெல்மெட் இல்லைன்னா பைன் போடவேண்டியதுதான…” என லக்னோவைச் சேர்ந்த ஒருவர், தன் சட்டையை பிடிக்கவந்த சம்பவம் ஒன்றை பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார் லக்னோவைச் சேர்ந்த ட்ராபிக் இன்ஸ்பெக்டர் பிரேம் சாகி.
 

Traffic

 

 

 

நடந்த கதை எளிமையானதுதான். என்னதான் பைன் போட்டாலும் கட்டுறாங்களே தவிர விழிப்புணர்வு வரமாட்டேங்குதேன்னு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமா லக்னோ போக்குவரத்து போலீசார் வித்தியாசமா யோசிச்சாங்க. சிக்னலுக்கு சிக்னல் ஹெல்மேட் போடாதவங்களைப் பிடிச்சு ஓரங்கட்டி… அட்வைஸ் பண்ணி கையில ஒரு ஹெல்மெட்டைத் தந்து… நல்லெண்ணத்தின் அடையாளமா ரோஜா ஒண்ணையும் கையில கொடுத்து அனுப்பியிருக்காங்க.
 

சரி நல்ல விஷயம்தானே… அதுக்கேன் ட்ராபிக் போலீஸ் சட்டையைப் பிடிக்கணும்னு கேட்கறீங்களா… அதுல ஒருத்தர் பொறுப்பா ஹெல்மெட்டையும் ரோஜாவையும் வீட்டுக்குக் கொண்டுபோயிருக்கார். பொண்டாட்டி பூவைப் பார்த்துட்டு, எவ கொடுத்தது இதுனு புருஷன் சட்டையைப் பிடிக்க… எவ்ளோ விளக்கியும் பயனில்லை. பார்த்தார் மனுஷன்… நேரா ஹெல்மெட் கொடுத்த போலீஸ்கிட்ட போய் முதல் பத்தில கேட்ட கேள்வியைக் கேட்டார்.
 

 

 

பாதிக்கப்பட்டவரோட நல்ல நேரம். ட்ராபிக் போலீஸ் ஹெல்மெட், பூ கொடுத்த நிகழ்வை வீடியோ, புகைப்படங்களா பதிவு பண்ணி வெச்சிருந்துச்சு. “சார், இந்த போட்டோவை வீட்ல கொண்டு போய் காட்டுங்க. உங்க மனைவி நம்புவாங்க”னு சமாதானப்படுத்தி திருப்பியனுப்பிச்சுருக்கு.
 

ட்ராபிக் இன்ஸ்பெக்டருக்கும் நல்ல நேரம்தான். யாராச்சும் பொண்ணுக்கு ஹெல்மெட்டும் பூவும் கொடுக்கும்போது… பூமட்டும் கொடுக்கறதை போட்டோ எடுத்து… அந்த போட்டோ இன்ஸ்பெக்டர் சம்சாரம் வரைக்கும் போயிருந்துச்சுன்னா… அவர் கதி என்னவாயிருக்கும்?
 

சார்ந்த செய்திகள்