Skip to main content

மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்... -மத்திய உள்துறை அறிவுறுத்தல்

Published on 12/06/2020 | Edited on 12/06/2020
Restrict People's Movement - Central govt Instruction

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கரோனா  தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் 2.97 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.  


இந்நிலையில் மத்திய அரசு சார்பில், மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின்  தலைமை செயலாளருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.  அவசர தேவைக்கு செல்வோர், பேருந்துகள், லாரிகள் போன்றவை தவிர பிற வாகனங்களில் நடமாடும்  மக்கள் கூட்டத்தை அந்தந்த மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது. 

உலகளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

 

சார்ந்த செய்திகள்