Published on 30/06/2022 | Edited on 30/06/2022
குடியரசுத் துணை தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 6- ஆம் தேதி அன்று நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று குடியரசுத் துணை தலைவர் தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் ஜூலை 5- ஆம் தேதி அன்று தொடங்குகிறது. வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 19- ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஜூலை 20- ஆம் தேதி அன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவைத் திரும்பப் பெற ஜூலை 22- ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.