Skip to main content

குடியரசு தின விழா; மோடியின் அழைப்பில் இந்தியா வரும் வெளிநாட்டு அதிபர்

Published on 17/01/2025 | Edited on 17/01/2025
Republic Day Celebration; Foreign president visiting India on Modi's invitation

ஆகஸ்ட் 15, 1947-ல் இந்தியா சுதந்திர மடைந்த நிலையில், ஜனவரி 26, 1950 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் அது தன்னை இறையாண்மை, ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

21 துப்பாக்கிகளின் முழக்கத்துடன் இந்திய தேசியக் கொடியை டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஏற்றியது, அன்று இந்தியக் குடியரசின் வரலாற்றுப் பிறப்பை வெளிப்படுத்தியது. அதன்பிறகு ஜனவரி 26 ஆம் தேதி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இந்திய குடியரசு தினமாக அங்கீகரிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் அணிவகுப்பு வாகனங்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் என குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரும் ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Republic Day Celebration; Foreign president visiting India on Modi's invitation

பிரதமர் மோடியின் அழைப்பின் பெயரில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ வரும் ஜனவரி 25ஆம் தேதி இந்தியா வர இருக்கிறார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வரும் அவர் இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்