Skip to main content

ஆம்புலன்ஸ்க்கு காசில்லை; தாயின் உடலை மகன் தோளில் சுமந்து சென்ற அவலம்

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

son carried mother body his shoulders because no money ambulance

 

ஆம்புலன்ஸ்க்கு கொடுக்க பணம் இல்லாததால் இறந்த தாயின் உடலை மகன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

மேற்கு வங்க மாநிலம், ஜல்பாய்குரி மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தில் வசித்து வருகிறார் ராம் பிரசாத் தெவன். இவரது தாயார் கடந்த சில நாட்களாக சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த, நிலையில் கடந்த புதன்கிழமை ஜல்பாய்குரியில் உள்ள மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

 

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் இருந்து, 40 கி.மீ  உள்ள கிராந்தி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு தாயாரை உடலை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் ராம் பிரசாத் தெவன், ஆம்புலன்ஸை கேட்டுள்ளார். ஆனால் அங்குள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடலை எடுத்துச் செல்வதற்காக ரூ. 3 ஆயிரம் கேட்டுள்ளார். ஆனால் ராம் பிரசாத் தெவனிடம் அவ்வளவு பணம் இல்லாததால், இறந்த தனது தாயின் உடலைப் போர்வையால்  போர்த்தி தந்தையின் உதவியுடன் தனது தோளில் சுமந்தபடி சென்றுள்ளார். வழியில் இந்த சம்பவத்தை பார்த்த தொண்டு நிறுவனம் ஒன்று ராம் பிரசாத் தெவனுக்கு இலவசமாக ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. அதன்பிறகு தந்து தாயாரின் உடலை அதில் எடுத்துச் சென்றுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்