இந்தியா தணிக்கை வாரிய தலைவர் நீக்கம்
மத்திய திரைப்பட தணிக்கை வாரிய (சென்சார் போர்டு) தலைவர் பஹ்லாஜ் நிஹலானி நீக்கப்பட்டுள்ளார். மத்திய சென்சார் போர்டு தலைவராக 2015ம் ஆண்டு பஹ்லாஜ் நிஹலானி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியில் இருந்த நிஹலானி மீது இந்தித் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கக் கெடுபிடி செய்ததாகப் புகார் எழுந்தது.
உட்தா பஞ்சாப், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா உள்ளிட்ட படங்களுக்கு அவர் கெடுபிடி செய்தார். சமீபத்தில் பாபுமுஷாய் பந்துக்பாஸ் இந்தி படத்துக்கு 48 காட்சிகளில் கட் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று பஹ்லாஜ் நிஹலானி, தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.