Skip to main content

வெளியான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை; பல இடங்களில் புயல் எச்சரிகைக் கூண்டு ஏற்றம்

Published on 08/09/2024 | Edited on 08/09/2024
nn

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு கடற்கரை மாவட்டங்களில் ஒன்றாம் என் புயல் கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், எண்ணூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல ராமேஸ்வரம், பாம்பன், குளச்சல், தூத்துக்குடி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவிற்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜயவாடாவில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக ஆந்திராவில் 'ரெட் அலர்ட்' அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

சார்ந்த செய்திகள்