Skip to main content

கேரளாவில் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

kerala

 

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைவதால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்கனவே கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரளாவில் உள்ள சில மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்டுகள் விடப்பட்டுள்ளன. கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

 

பதனம்திட்டா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. 

 

ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ள மாவட்டங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழையும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 11-20 சென்டிமீட்டர் மழையும், மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ள 7-11 சென்டி மீட்டர் மழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்